Published : 14 Mar 2025 05:29 AM
Last Updated : 14 Mar 2025 05:29 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் ஹோலி பண் டிகை இன்று தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து சில நகரங்களில் பொதுமக்கள் முக் கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றும் தங்கள் ஹோலி நாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின் றனர். இந்த நேரங்களில் வழியில் அமைந்த மசூதிகள் மீது வண் ணக் கலவைகள் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதை யடுத்து உத்தர பிரதேச மாநிலத் தில் கவலரம் ஏற்படாமல் தடுக்க, முதல் முறையாக அலிகர், பரேலி, சம்பல் நகரங்களில் உள்ள சில மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன.
ஹோலி பண்டிகையின் போது ஷாஜகான்பூரில் உள்ள மசூதி களை தார்பாய்களால் மூடும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இப்பகுதியில்ஆட்சி செய்த நவாப் கடும் அடக்குமுறையை கையாண்டதால் பொதுமக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அதன்படி ஹோலி பண்டிகையிலும் படே நவாப் (பெரிய நவாப்), சோடே நவாப் (சிறிய நவாப்) என இருவரை பெயரளவில் தேர்வு செய்து எருமை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். அப்போது இரு புறமும் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் காலணிகளை வீசுவது வீசுவது வழக்கம்.
இந்த காலணிகள் மசூதிகள் மீது விழுந்து விடாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக ஊர்வல பாதையில் உள்ள சுமார் 27 மசூதிகள் மீது தார்பாய் போட்டு மூடிவிடுகின்றனர். அதே போல் பதற்றம் ஏற்படும் நிலை உள்ள நகரங்களில் மசூதிகளை தார்பாய் போட முடிவெடுக்கப் பட்டது. சம்பல் பகுதியில் உள்ள ஜாமியா மசூதி, சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து நீதி மன்ற உத்தரவின்படி கடந்த நவம் பர் 24-ம் தேதி மசூதியில் தொல் லியல் துறை களஆய்வு நடத்திய போது, கலவரம் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி ஊர்வலப் பாதையில் அமைந்த சம்பலின் 10 மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன. அலிகரிலும் ஊர்வல பாதை யில் உள்ள மசூதிகள். பரேலியின் சில மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இன்று ஹோலி பண்டிகை தொடக்கம் மற்றும் ரமலான் மாதத்தின் 2-வது சிறப்பு வெள்ளிக்கிழமையாக அமைந்துள்ளது. இதனால், இன்று சிறப்பு தொழுகை நேரத்தை 12.00 மணி யில் இருந்து 2.30 மணிக்கு என முஸ்லிம்கள் தாமாக முன்வந்து தள்ளி வைத்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT