சிட்பண்ட் மோசடியில் சொகுசு விமானம் பறிமுதல்

சிட்பண்ட் மோசடியில் சொகுசு விமானம் பறிமுதல்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சிட்பண்ட் மோசடி வழக்கில் தனியார் சொகுசு விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஃபால்கன் குரூப் என்ற நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியது. இதில் ரூ.850 கோடி வரை மோசடி செய்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

ஃபால்கன் குரூப் தலைவர் அமர்தீப் குமார் ஏற்கெனவே வெளிநாட்டுக்கு தப்பிவிட்ட விலையில் அவருக்கு சொந்தமான 8 இருக்கைகள் விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை அமலாக்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in