மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உரையாற்றினார். அப்போது அவர், “இந்தக் கூட்டத்தொடர் வெறும் சட்டமன்ற சம்பிரதாயம் மட்டுமல்ல, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் முதன்மையான விருப்பங்களில் ஒன்று முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாகும். இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதில் எனது அரசாங்கம் உறுதியாக உள்ளது. உணர்வுப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த விருப்பத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. இதற்கான செயல்முறையை எளிதாக்க தொடர்புடைய அனைவருடனும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக சமர்ப்பிக்கப்படும் இந்த பட்ஜெட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட மக்களின் சக்தியைக் குறிக்கிறது.” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in