தவறான மருத்துவ விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கு: ராம்தேவ், பாலகிருஷ்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட்

தவறான மருத்துவ விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கு: ராம்தேவ், பாலகிருஷ்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட்
Updated on
1 min read

தவறான முறையில் மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதற்கான வழக்கில் பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை பிறப்பித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்ய பார்மசிக்கு எதிராக கேரள மருத்துவ ஆய்வாளர் வழக்கு தொடர்ந்தார். அதில், அந்நிறுவனம் விளம்பர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, இந்த குற்ற வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்கள் ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆஜராக தவறியதையடுத்து, கேரள பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக திவ்யா பார்மசியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாலகிருஷ்ணன் மற்றும் மூன்றாவதாக ராம்தேவின் பெயர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in