விவசாயிகள் போராட்டத்தை முடிக்க மத்திய அரசு உதவியை நாடும் பஞ்சாப் அரசு

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் கோரி பஞ்சாப் மாநிலத்தின் சங்ருர் மாவட்டத்தில் உள்ள கானுவாரி எல்லையில் ‘கிசான் பஞ்சாயத்’ கூட்டம் நேற்று நடைபெற்றது. அங்கு விவசாயிகள் நேற்று குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் கோரி பஞ்சாப் மாநிலத்தின் சங்ருர் மாவட்டத்தில் உள்ள கானுவாரி எல்லையில் ‘கிசான் பஞ்சாயத்’ கூட்டம் நேற்று நடைபெற்றது. அங்கு விவசாயிகள் நேற்று குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு கோரிக்கை வைத்துள்ளது.

பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கடந்த டிசம்பர் 20-ம் தேதி பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்வேன் என தல்லிவால் கூறியுள்ளார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து பஞ்சாப் வேளாண் துறை அமைச்சர் குர்மீத் சிங் மத்திய அரசுக்கு கடிசம் எழுதி இருந்தார். அதில், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு உதவ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் கடந்த 1-ம் தேதி மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து பஞ்சாப் அமைச்சர் குர்மித் சிங் கூறும்போது, “விவசாயிகள் போராட்டத்தை முடித்து வைக்க உதவுமாறு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in