துப்பாக்கி பழுதானதால் உயிர் தப்பிய திரிணமூல் கவுன்சிலர்

சுசாந்தா கோஷ்
சுசாந்தா கோஷ்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கொல்கத்தா மாநகராட்சியின் 108-வது வார்டுகவுன் சிலராக சுசாந்தா கோஷ் பதவி வகிக்கிறார்.

இவர் நேற்றுமுன்தினம் வீட்டுமுன் இருந்தபோது ஸ்கூட் டரில் வந்த 2 பேரில் ஒருவர் சுசாந்தா கோஷை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குண்டு வெளியேறவில்லை. துப்பாக்கி பழுதாகியிருந்ததை உணர்ந்த நபர் தான் வந்த ஸ்கூட்டரில் ஏறி தப்ப முயன்றார். அவரை, சுசாந்தா கோஷ் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஸ்கூட்டரில் இருந்த நபர் தப்பிவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in