

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் மாணவ, மாணவியரிடம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறிய தாவது: இஸ்ரோவின் நிதி தேவைக்காக அரசை மட்டுமே நாங்கள் சார்ந்திருக்கவில்லை. வணிக வாய்ப்புகளை நாங்களே உருவாக்குகிறோம். அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறோம். இஸ்ரோவுக்காக செலவிடும் தொகை 2.54 மடங்காக திரும்ப கிடைக்கிறது. அதாவது ஒரு ரூபாய் செலவு செய்தால் ரூ.2.54 வருவாய் கிடைக்கிறது. 2023-ம் ஆண்டில் இஸ்ரோ வருவாய் 6.3 பில்லியன் டால ராக உயர்ந்து உள்ளது. நடப்பு 2024-ம் ஆண்டில் இஸ்ரோவின் வருவாய் 8.4 பில்லியன் டாலராக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.