ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரரின் உடல் வனப்பகுதியில் கண்டெடுப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் காணாமல் போன பிராந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரரின் உடல், குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷா பகுதியில் இருந்து காணாமல் செவ்வாய்க்கிழமை போயிருந்ததாக கூறப்பட்ட பிராந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஹிலால் அஹ்மத் பட்-டின் உடல் அனந்தநாக் மாவட்டத்தின் உட்ரசோ பகுதியில் உள்ள சங்லான் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ வீரரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இது குறித்து விவரமறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் கடத்தப்பட்டனர். செவ்வாய்க்கிழமை இரவு இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் தப்பிவந்துவிட்டார்” என்றது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in