ஜெகன் வீட்டின் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ஜெகன் வீட்டின் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

அமராவதி: அமராவதியில் உள்ள ஆந்திரமுன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு முன்புநேற்று காலை திடீரென பாஜக இளைஞர் அணியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்தது தொடர்பாக ஜெகனையும், அப்போதைய திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தையும், அறங் காவலர்களையும் குற்றம் சாட்டினர்.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தார்மீக பொறுப்பேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலை 3 முறைசுற்றி வந்து, கோயில் முன்பு முட்டிபோட்டு இந்துக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஜெகன்மோகன் வீட்டை இடித்து தரைமட்டமாக்குவோம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். குங்குமம் கலந்த தண்ணீரை ஜெகன் வீட்டின் மீது கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in