தெலங்கானா முதல்வர் முன்னிலையில் 130 நக்சலைட்டுகள் சரண்

தெலங்கானா முதல்வர் முன்னிலையில் 130 நக்சலைட்டுகள் சரண்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கானாவில் ஹைத​ரா​பாத் பஞ்​சாரா ஹில்ஸ் பகு​தி​யில் உள்ள போலீஸ் கமாண்ட் கண்ட்​ரோல் மையத்​தில் நேற்று முதல்​வர் ரேவந்த் ரெட்டி முன்​னிலை​யில் 130 நக்​சலைட்​டு​கள் ஆயுதங்​களோடு சரண் அடைந்​தனர்.

இதில் 125 பேர் சத்​தீஸ்​கர், 4 பேர் தெலங்​கா​னா, ஒரு​வர் ஆந்​திர மாநிலங்​களை சேர்ந்​தவ​ர்கள். இவர்​கள் தரப்​பில் 124 ஆயுதங்​கள், வெடி மருந்​துகள் போன்​றவை போலீ​ஸாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

இக்​கூட்​டத்​தில் முதல்​வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: நக்​சலைட்​டு​களுக்கு போலீ​ஸார் கொடுத்த நம்​பிக்​கையே அவர்​களை சரண் அடைய வைத்​துள்​ளது. இனி அவர்​களுக்கு பொது மன்​னிப்பு வழங்​கப்​படும். தெலங்​கானா மண்​ணில் நக்​சலிசத்​திற்கு இடம் இல்​லை. இது​வரை 721 நக்​சலைட்​டு​கள் சரண் அடைந்​துள்​ளனர். 250 ஆயுதங்​கள் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன.

சரண் அடைந்​தவர்​களுக்கு ஆரோக்​கிய திட்ட அட்டை வழங்​கப்​பட்​டுள்​ளது. விரை​வில் அவர்​களுக்கு அறி​வித்த ரொக்​கம் முழு​வது​மாக வழங்​கப்​படும். மீத​முள்​ளவர்​கள் மீது மத்​திய, மாநில அரசுகளின் கண்​காணிப்பு இருந்து கொண்டே இருக்​கும். ஆதலால் அவர்​களும் சரண் அடைந்து விடு​வது நல்​லது. இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.

தெலங்கானா முதல்வர் முன்னிலையில் 130 நக்சலைட்டுகள் சரண்
15 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வந்த இந்திய டிரைவருக்கு ஷார்ஜாவில் ரூ.10 கோடி பரிசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in