13 ஆண்டாக கோமாவில் இருந்தவர் கருணைக் கொலை: ஹரிஷ் ராணாவுக்கு கண்ணீருடன் குடும்பத்தினர் பிரியாவிடை

13 ஆண்டாக கோமாவில் இருந்தவர் கருணைக் கொலை: ஹரிஷ் ராணாவுக்கு கண்ணீருடன் குடும்பத்தினர் பிரியாவிடை
Updated on
1 min read

புதுடெல்லி: “அனை​வரை​யும் மன்​னித்​து​விடு. நீ கிளம்ப வேண்டிய நேரம் வந்​து​விட்​டது" என்று சொல்லி 13 ஆண்​டாக கோமா​வில் படுத்​திருந்த ஹரிஷ் ராணாவுக்கு அவருடைய குடும்பத்​தினர் கண்​ணீருடன் பிரி​யா​ விடை கொடுத்தனர்.

டெல்லி அருகே காஸி​யா​பாத் பகு​தியை சேர்ந்​தவர் ஹரிஷ்ராணா. இவர் பஞ்​சாப் பல்​கலைக்​கழகத்​தில் பி.டெக் படித்து வந்த நிலை​யில், தங்​கி​யிருந்த விடு​தி​யின் 4-வது மாடியில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு தவறி விழுந்​தார். இதில் அவருக்கு மூளை​யில் காயம் ஏற்​பட்டு 13 ஆண்​டு​களாகப் பல்​வேறு சிகிச்​சைகள் மேற்​கொண்​டும் நினைவு திரும்​பவில்லை. இதையடுத்து அவரை கருணைக் கொலை செய்​யக் கோரி பெற்றோர் உச்ச நீதிமன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.

பஞ்​சாப் பல்​கலைக்​கழக முன்​னாள் மாணவ​ரான ஹரிஷ் ராணா ‘கண்​ணி​ய​மான முறை​யில் உயி​ரிழக்​கும் உரிமை​யை' உச்ச நீதிமன்​ற​மும் வழங்​கியது. இந்​தி​யா​விலேயே இத்​தகைய அனு​மதி வழங்​கப்​படு​வது இதுவே முதல் ​முறை​யாகும். இந்த நிலை​யில், ஹரிஷ் ராணா​வின் குடும்​பத்​தினர் அவரோடு கடைசி 22 நிமிடங்களை கழித்த வீடியோ வெளி​யாகி பார்ப்​போர் கண்​களை குள​மாக்கி வரு​கிறது.

அதில், ஹரிஷ் ராணா​வின் தாயார் மிகுந்த சோகத்​துடன் மகனின் அரு​கில் அமர்ந்​திருக்க, பிரம்ம குமாரி​கள் அமைப்​பைச் சேர்ந்த ஒரு சகோதரி ஹரிஷின் நெற்​றி​யில் தில​கமிடு​கிறார். படுக்கையில் இருக்​கும் ஹரிஷின் தலையை கோ​தி​யபடி, “அனைவரை​யும் மன்​னித்​து​விடு. இப்​போது நீ விடை​பெற வேண்டிய நேரம் வந்​து​விட்​டது, சரி​தானே?" என்று அந்த சகோதரி மென்மையாக கூறு​வதும் அதனை ஆமோ​திப்​பது​போல் அசையாமல் படுத்​திருக்​கும் ஹரிஷ் தலையை மட்​டும் அசைக்கும் வீடியோ சமூக வலை​தளங்​களில் தற்​போது வைரலாகி வரு​கிறது.

காஸி​யா​பாத் நகரின் அமை​தி​யான அந்​தச் சந்​தில், அசைவற்றுப்படுத்​திருந்த ஹரிஷ் ராணா​வின் படுக்​கை​யைச் சுற்றி அமர்ந்​து, அவரது குடும்​பத்​தினர் இறுதி விடை கொடுத்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் அவரது உயிர்காக்​கும் கருவி​கள் படிப்​படி​யாக அகற்​றப்​பட்டு வரும் நிலையில், நெஞ்சை உருக்​கும் இந்​தச் சந்​திப்பு நிகழ்ந்​தது.

13 ஆண்டாக கோமாவில் இருந்தவர் கருணைக் கொலை: ஹரிஷ் ராணாவுக்கு கண்ணீருடன் குடும்பத்தினர் பிரியாவிடை
மேற்கு வங்கத்தில் 25 ஆண்டுக்குப் பின் இரண்டு கட்டத் தேர்தலின் பலன் யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in