திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 13 பேர் உயிரிழப்பு

திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 13 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்​சூர் மாவட்​டம் முண்​டத்​தி​கோட் பகு​தி​யில் பட்​டாசுத் தொழிற்​சாலை உள்​ளது.

திருச்​சூர் மாவட்​டத்​தில் ஆடிப்​பூரம் திரு​விழா மிக​வும் விமரிசையாக நடை​பெறும். அப்​போது வாண வேடிக்​கைகள் அதிக அளவில் நடை​பெறும். அதற்​காக இந்​தத் தொழிற்சாலையில் பட்​டாசு தயாரிக்​கும் பணி​கள் மும்​முர​மாக நடை​பெற்று வந்​தன. இந்​நிலை​யில் நேற்று தொழிற்​சாலை​யில் 65-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை பார்த்​துக் கொண்டிருந்​தனர். அப்​போது ஆலை​யில் வெடி​விபத்து ஏற்​பட்டு பட்​டாசுகள் வெடித்​துச் சிதறின.

இதையடுத்து அங்​கிருந்த தொழிலா​ளர்​கள் அலறியடித்​துக் கொண்டு ஓடினர். இதில் 13 தொழிலா​ளர்​கள் உடல் சிதறி சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும் 40 பேர் காயமடைந்து திருச்சூர் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்கப்பட்டுள்​ளனர். இதில் 5 பேர் நிலைமை கவலைக்​கிடமாக உள்​ள​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். திருச்​சூர் போலீ​ஸார் விசா​ரித்​து வரு​கின்​றனர்.

பிரதமர் இரங்கல்: இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, "இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.

திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 13 பேர் உயிரிழப்பு
ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்: தேவஸ்தான நிர்வாக அதிகாரி பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in