சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு: சோகத்தில் மகாராஷ்டிர கிராமம்

சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு: சோகத்தில் மகாராஷ்டிர கிராமம்
Updated on
1 min read

மும்பை: மகா​ராஷ்டி​ரா​வின் பால்​கர் மாவட்​டம் லகத்​படா கிராமத்​தைச் சேர்ந்த பல்​ரா​முக்​கும் அரு​கில் உள்ள தனி​வாரி கிராமத்​தைச் சேர்ந்த பெண்​ணுக்​கும் திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்டு உள்​ளது.

தனி​வாரி கிராமத்​தில் நேற்று முன்​தினம் நிச்சய விழாவுக்கு ஏற்பாடு செய்​யப்​பட்டு இருந்​தது. இதில் பங்​கேற்க பல்​ராம் குடும்பத்தை சேர்ந்​தவர்​கள் லகத்​படா கிராமத்​தில் இருந்து ஒரு சரக்கு லாரி​யில் புறப்​பட்​டனர். இதில் சுமார் 50-க்​கும் மேற்பட்டோர் பயணம் செய்​தனர்.

பால்​கர் மாவட்​டம், மும்​பை- அகம​தா​பாத் நெடுஞ்​சாலை​யில் சரக்கு லாரி சென்​ற​போது, எதிரே வந்த மற்​றொரு சரக்கு லாரி மோதி​யது. இதில் நிச்சய விழாவுக்கு சென்ற 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படு​கா​யம் அடைந்​தனர்.

இது குறித்து லகத்​படா கிராம தலை​வர் பிரதீப் ஜாதவ் கூறியதாவது: பல்​ ராம் திருமண நிச்சய விழா​வில் பங்​கேற்க ஒட்டுமொத்த கிராம மக்​களும் ஒரு சரக்கு லாரி​யில் சென்​றனர். ஆனால் எதிர்​பா​ராத சாலை விபத்​தால் பெரும்​பாலான வீடு​களில் உயி​ரிழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. ஒட்​டுமொத்த கிராம​மும் சோகத்தில் மூழ்​கி​யிருக்​கிறது. பலர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறுகின்​றனர். கடந்த இரு நாட்​களாக எங்​களால் எதுவும் சாப்​பிட முடிய​வில்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சாலை விபத்​தில் உயி​ரிழந்த 13 பேரின் உடல்​கள் நேற்று லகத் படா கிராமத்​தில் தகனம் செய்​யப்​பட்​டன. உயி​ரிழந்​தோரின் குடும்​பங்​களுக்கு மாநில அரசு சார்​பில்​ தலா ரூ.5 லட்​சம்​ நிவாரண உதவி வழங்​கப்​பட்​டு உள்​ளது.

சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு: சோகத்தில் மகாராஷ்டிர கிராமம்
‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ - பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in