ஐயூஎம்எல் தொண்டர் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

ஐயூஎம்எல் தொண்டர் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
Updated on: 
1 min read

கொச்சி: கண்​ணூரில் இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தொண்​டர் அப்துல் ஷுக்கூர் படு​கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் 13 பேரை குற்​ற​வாளி​களாக சிபிஐ சிறப்பு நீதி​மன்​றம் அறி​வித்​தது. மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 2 மூத்த தலை​வர்​கள் உள்ளிட்ட 18 பேர் விடு​தலை செய்​யப்​பட்​டனர்.

கேரள மாநிலம், கண்​ணூர் மாவட்​டம், கண்​ணபுரம் அருகே கீழாரா பகு​தி​யில், கடந்த 2012-ம் ஆண்டு இந்​திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்​எல்) தொண்​டர் அப்​துல் ஷுக்​கூர் கொடூரமாகக் கொலை செய்​யப்​பட்டார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சித் தலை​வர்​களான பி. ஜெய​ராஜன், டி.​வி. ராஜேஷ் ஆகியோர் சென்ற வாகனம் தாக்​கப்​பட்​டதற்​குப் பழி​வாங்​கும் வகை​யில் இந்தக் கொலை நடந்​த​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இந்த வழக்கு சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் சிபிஐ குற்​றப் பத்​திரி​கை​யைத் தாக்​கல் செய்​தது. அதில் ஜெய​ராஜன், ராஜேஷ் ஆகியோர் மீது குற்​றச் சதி குற்​றச்​சாட்டு முன்​வைக்​கப்​பட்​டது. இந்த வழக்​கில் ஆரம்​பத்​தில் 33 பேர் குற்​றம் சாட்​டப்​பட்​டிருந்​தனர். விசா​ரணை​யின்​போது இருவர் உயி​ரிழந்​த​தால், எஞ்​சிய 31 பேர் விசா​ரணையை எதிர்​கொண்டனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில், 13 பேர் குற்​ற​வாளி​களாக சிபிஐ சிறப்பு நீதி​மன்​றம் அறி​வித்​தது. மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சியின் முன்​னாள் கண்​ணூர் மாவட்​டச் செய​லா​ளர் பி. ஜெய​ராஜன், முன்​னாள் கல்​லி​யாசேரி எம்​எல்ஏ டி.​வி. ராஜேஷ் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாவட்ட தலை​வர் எம்​.​வி. கோவிந்​தனின் மகன் ஷியாம்​ஜித் உள்​ளிட்ட 18 பேரை நீதி​மன்​றம் விடு​தலை செய்​தது.

ஐயூஎம்எல் தொண்டர் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்ததால் இந்தியருக்கான விசா சலுகையை ரத்து செய்த மலேசியா

X