செபி தலைவர் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

செபி தலைவர் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: செபி தலைவர் மாதபி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரியும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அக்கட்சியின் டெல்லி பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

குறிப்பாக, டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், சச்சின் பைலட், கன்னையா குமார்,உதித் ராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சச்சின் பைலட் மேலும் கூறுகையில், “அதானி விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையை மட்டுமே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால், பிறகு ஏன் நீங்கள் நாடாளுமன்ற கூட்டு குழுவை (ஜேபிசி)அமைக்கவில்லை?

இப்பிரச்சினைக்கு ஜேபிசி விசாரணை மட்டுமே ஒட்டுமொத்த தீர்வாக அமையும் என ஒட்டுமொத்த தேசமும் நம்புகிறது. மேலும், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செபி தலைவர் மாதபி புச் தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in