ஜார்க்கண்ட் அரசியல் | பாஜகவில் இணைகிறாரா சம்பாய் சோரன்? - 6 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாம்

ஜார்க்கண்ட் அரசியல் | பாஜகவில் இணைகிறாரா சம்பாய் சோரன்? - 6 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாம்
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி பிரமுகரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும், விரைவில் அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்துள்ளேன். வதந்திகள் பரப்பப்படுவது குறித்து எதுவும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in