

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளுக்கு ராணுவத் தளபதி உபேந்திர திவேதி நேற்று பயணம் மேற்கொண்டார்.
ஊடுருவல் முறியடிப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்து அவர் ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ராணுவத் தளபதி கார்கில் புறப்பட்டுச் சென்றார். அங்கு கார்கில் போர் வெற்றி தினத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்றார்.
ராணுவத் தளபதி உபேந்திர திவேதி நேற்று முன்தினம் நகர் வந்து சேர்ந்தார். குப்வாராவில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த நாயக் தில்வார் கானுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் ராணுவ, சிவில் அதிகாரிகள் பலரும் தில்வார் கானுக்கு அஞ்சலி செலுத்தினர்.