‘அமேதி, ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார்’

‘அமேதி, ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார்’
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலத்தில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ உத்தர பிரதேசத்தில் மதிப்புமிக்க அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான மக்களைவை வேட்பாளர்கள் குறித்த சஸ்பென்ஸ் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இறுதி செய்வார். இதுகுறித்து, 24 மணி நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். எனவே யாரும் பயப்பட வேண்டாம். போட்டியிடுவதிலிருந்து யாரும் பின்வாங்கவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in