இந்தூரில் 6 மாத பெண் குழந்தை கடத்தி கொலை

இந்தூரில் 6 மாத பெண் குழந்தை கடத்தி கொலை
Updated on
1 min read

இந்தூரில் 6 மாத பெண் குழந்தை ஒன்று கடத்தி கொல்லப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து இந்தூர் போலீஸார் தரப்பில், "மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ராஜ்வாடா பகுதியில், ஒரு வணிக வளாக கட்டிடத்தில் கீழ்பகுதியில் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 அந்தக் கட்டித்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை கொண்டு சுனில் பில் (21) என்ற இளைஞரை கைது செய்துள்ளோம். சுமார் 4.45 மணியளவில் சுனில் அந்த வணிக வளாக கட்டிடத்துக்கு குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.  

விசாரணையில் சுனில் அப்பெண் குழந்தையின் பெற்றோருக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் அவர்கள் தூங்கி கொண்டிருக்கும்போது குழந்தையை கடத்தி கொண்டு வந்திருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.

குழந்தையின் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தை எப்படி கொல்லப்பட்டது என்று உடற் கூறு ஆய்வின் மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். விரைவில் சுனில் கைது செய்யப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் கொல்லப்படுவதற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம்  என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in