

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அவர்கள் விரும்பும் இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகை யில் பணியிட மாற்றம் தொடர்பான கொள்கைகளை உருவாக்குமாறு வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி பெண் ஊழியர்கள் தங்களின் பெற்றோர் வாழும் இடத்திற்கோ அல்லது கணவர் வசிக்கும் இடத்திற்கோ பணியிட மாறுதல் கேட்டால், அதை உடனடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கணவர் ஓரிடத்திலும், மனைவி வேறொரு இடத்திலும் பணிபுரிவதால், குடும்பத்தை பிரிந்து வாழ வேண்டிய சூழ் நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் பெண் ஊழியர்கள், பாதுகாப்பற்ற நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இப்பிரச் சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், பணியிட மாற்றக் கொள்கையில் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சலுகை, சம்பந்தப் பட்ட வங்கி நிர்வாகங் களின் உயர் நிலைக்குழு ஒப்புதல் அளித்த பின்பு அமலுக்கு வரவுள்ளது. அதன் பின்பு, கணவர் அல்லது பெற்றோர் வசிக்கும் இடத்தில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் இடத்தில் பெண் ஊழியர்கள் எளிதாக பணியிட மாற்றம் பெற முடியும். நாட்டில் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அதில் பணிபுரியும் 8 லட்சம் ஊழியர்களில் 2.5 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.