பாஜகவின் அடிமை ஜெகன்: ஷர்மிளா விமர்சனம்

ஒய்.எஸ்.ஷர்மிளா, ஜெகன் மோகன்
ஒய்.எஸ்.ஷர்மிளா, ஜெகன் மோகன்
Updated on
1 min read

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று தான் போட்டியிடும் கடப்பா மக்களவைத் தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “கடந்த 5 வருடங்களாக பாஜகவுக்காக ஒரு அடிமை போல் ஆட்சி நடத்தியவர் ஜெகன் மோகன். கோத்ரா கலவரம் குறித்து வாய் திறக்காதவர். இப்படி பாஜக செய்த எந்தவொரு தவறுகளுக்கும் மவுனம் காத்தவர். அப்படி இருக்கையில், பாஜக என்றாலே பிடிக்காத ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு, ஜெகன் எப்படி வாரிசாக முடியும்?

தான் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித் தொகை, தனி வங்கி, இறந்து விட்டால் அவரது வீட்டாருக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக ஜெகன் கடந்த 2019-ல் நடந்த தேர்தலில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால், இவற்றில் ஒன்றை கூட அவர் நிறைவேற்றவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in