பெண்கள் பீர் குடிப்பது குறித்த மனோகர் பாரிக்கர் கருத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்: இந்திய அளவில் டிரெண்டாகும் #GirlsWhoDrinkBeer

பெண்கள் பீர் குடிப்பது குறித்த மனோகர் பாரிக்கர் கருத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்: இந்திய அளவில் டிரெண்டாகும் #GirlsWhoDrinkBeer
Updated on
1 min read

இளம் பெண்கள் பீர் குடிப்பது குறித்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறிய கருத்தால் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

கோவா மாநிலம் பனாஜியில் இளைஞர்கள் பங்கேற்ற மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர்

‘‘கோவா மாநிலத்தில் இளைய தலைமுறையினரிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவது வேதனையை தருகிறது. இளம் பெண்கள் கூட பீர் குடிப்பதை பார்க்கும் போது கவலை ஏற்படுகிறது. ஐஐடியில் நான் படிக்கும்போதுகூட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தன.

எனினும் மிகக் குறைந்த அளவே இளைஞர்களிடையே போதை பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது இது பெரிய அளவில் சமூக பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது"எனக்கூறினார்.

இந்த நிலையில் பெண்கள் பீர் குடிப்பது குறித்து மனோஜ் பாரிகர் கூறிய கருத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் #GirlsWhoDrinkBeer என்ற ஹாஷ்டேக்குடன் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். பலரும் பீர் பாட்டில் புகைப்படத்தை பதிவிட்டுவருகின்றன #GirlsWhoDrinkBeer என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in