சண்டிகர் மேயர் தேர்தல்: பாஜக தலைவர் நட்டாவை கேலி செய்த சிவசேனா எம்.பி. பிரியங்கா

பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி
Updated on
1 min read

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவின் வெற்றியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை கேலி செய்துள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்லில் பாஜகவின் வெற்றியைப் பாராட்டி நட்டா வெளியிட்ட எக்ஸ் பதிவை கேலி செய்துள்ள பிரியங்கா, பாஜக ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இண்டியா கூட்டணியின் வெற்றியை சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டாவின் முந்தைய பதிவினை டேக் செய்து பிரியங்கா சதுர்வேதி, இப்போது நட்டா என்ன ட்வீட் செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ட்வீட் பரிந்துரை: மேயர் தேர்தலில் மோசடி செய்ததற்காக சண்டிகரிடம் மன்னிப்பு கோருகிறோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஜனநாயகத்தைச் செயலிழக்கச் செய்வதற்கான சாதனை முயற்சிகளை இந்தியா சந்தித்துள்ளது. பாஜகவின் போலியான கணக்குகளின் முடிவுகளுக்கு மத்தியில் இண்டியா கூட்டணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சண்டிகர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்ததைத் தொடர்ந்து சண்டிகர் பாஜகவை பாராட்டியிருந்த ஜெ.பி நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், “மேயர் தேர்தலில் வெற்றி பெற்றத்தற்காக சண்டிகர் பாஜகவுக்கு எனது வாழ்த்துக்கள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் யூனியன் பிரதேசங்கள் தங்களின் சாதனை வளர்ச்சிகளை கண்டுள்ளன. இண்டியா கூட்டணி தங்களது முதல் தேர்தல் போரினைச் சந்தித்த போதிலும், அவர்களின் கணக்குகள் வேலை செய்யவில்லை என்பதை பாஜக நிரூபித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக குல்தீப் குமார் சண்டிகர் மேயராகி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in