

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், "லக்னோவில் இன்று (வியாழக்கிழமை) பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 16 பள்ளி சிறுவர்கள் காயமடைந்தனர்.காயமடைந்த அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி வாகனத்தை லாரி முந்திக்கொண்டு செல்ல முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.