Published : 05 Dec 2023 07:36 AM
Last Updated : 05 Dec 2023 07:36 AM

பயிற்சி விமானம் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் டூப்ரான் அருகே பயிற்சி விமானம் ஒன்று நேற்றுபயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது, அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது. அந்த விமானம் பாறைகளுக்கு இடையே நொறுங்கி விழுந்ததும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x