சத்தீஸ்கரில் பாஜக வெற்றியால் நக்ஸல்களுக்கு சிக்கல்

சத்தீஸ்கர் மாநில பாஜக அலுவலகத்தில் வெற்றியை கொண்டாடிய அக்கட்சியினர்
சத்தீஸ்கர் மாநில பாஜக அலுவலகத்தில் வெற்றியை கொண்டாடிய அக்கட்சியினர்
Updated on
1 min read

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியில் அமர உள்ளது. இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் பாதுகாப்புக்கு அதிக அளவில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

முதல் முறையாக நக்சல்கள் ஆதிக்கம் உள்ள கிராமங்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த 12 தொகுதிகளில் 9 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘‘பஸ்தர் மாவட்டத்தில் வேரூன்றியிருக்கும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’’ என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார். பாஜக இங்கு வெற்றி பெற்றதன் மூலம் இடதுசாரி தீவிரவாதத்திற்கு கடைசி மணி அடிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in