

திருப்பதி: ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி நேற்று சித்தூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர் ரோஜா எத்தனை கோடி சம்பாதித்துள்ளார் என்பது உட்பட அவரது ஊழல் கணக்குகள் முதல்வர் ஜெகனிடமும், அடுத்ததாக எங்களிடம் தயாராக உள்ளன. அதனை மக்கள் முன் எப்போது அம்பலப்படுத்த வேண்டுமோ அப்போது அம்பலப்படுத்துவோம். மேலும், வரும் 2024 சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர் ரோஜாவுக்கு அவரது கட்சியே ‘சீட்’ வழங்காது.
இவ்வாறு பானுபிரகாஷ் ரெட்டி பேசினார்.