“சனாதன தர்மம் நாட்டுக்காகவும், மக்களுக்காகவுமே எப்போதும் பாடுபடுகிறது” - யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்  | கோப்புப்படம்
யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம்
Updated on
1 min read

கோரக்பூர்: சனாதன தர்மம் எப்போதும் தீய சக்திகளை சவாலாக ஏற்றுக்கொண்டு நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நன்மைக்காகவும் செயல்படுகிறது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் ஆலையத்தில் நடந்த நவராத்திரி விழாவின் 9-வது நாளான சாரதிய நவராத்ரி விழாவில் கலந்து கொண்டார். அவர் அங்கு நடந்த பூஜைகளில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்யநாத், "நாளை விஜய. தசமி விழா. இது தர்மம், உண்மை, நீதி வெற்றி பெற்ற நாளாகும். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் போது, சனாதன தர்மம் தீய சக்தியை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு எப்போதும் நாட்டுக்காவும் நாட்டு மக்களின் நலனுக்காவும் பாடுபடுகிறது. மனித குலத்துக்கு வழிகாட்டுகிறது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, கோரக்பூர் ஆலையத்தில் நடைபெற்ற கன்னியா பூஜையில் பங்கேற்று, மாத்ரி சக்தியை போற்றும் விதமாக கன்னிப்பெண்களின் பாதங்களைக் கழுவி பூஜை செய்தார். இப்பூஜைக்கு பின்னர் அக்கன்னிப் பெண்களுக்கு புதிதாக சமைத்த உணவுகளைப் பரிமாறினார். இவர்களைத் தவிர பெருமளவில் இந்தப் பூஜையில் கலந்து கொள்ள வந்த சிறுமியர், சிறுவர்களுக்கும் முதல்வர் ஆரத்தி காட்டினார். பின்னர் கன்னிப்பெண்களுக்கு தட்சணை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கால பைவரவருக்கு செய்யப்படும் சிறப்புப் பூஜையை செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in