அமேதி செல்கிறார் ராகுல் காந்தி

அமேதி செல்கிறார் ராகுல் காந்தி
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதி மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் செல்கிறார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 16-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர் அமேதிக்கு செல்வது இதுவே முதல்முறை. இந்திய வம்சாவளியினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொள்ள பஹ்ரைன் சென்றிருந்த ராகுல் செவ்வாய்க்கிழமை டெல்லி திரும்பினார்.

அரசு விருந்தினராக சென்ற அவர், பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் அஹமத் அல் காலிபாவையும் வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசினார். தனது பஹ்ரைன் பயணம் சிறப்பாக அமைந்ததாகவும் இதற்காக அனைவருக்கும் நன்றி என்றும் ட்விட்டரில் ராகுல் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in