

மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் அனைவரது பண்டிகைகளையும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ஒரு மத அடிப்பவைவாத அமைப்பு அண்மையில் ஓர் எச்சரிக்கை சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், அலிகாரில் உள்ள பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடக்கூடாது என்றும். அவ்வாறு கொண்டாடினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தது.
இது குறித்து இன்று ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், "கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஹோலி, தீபாவளி என எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அதை மக்கள் நிம்மதியாகக் கொண்டாட வேண்டும். எனவே, அமைத்துக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிறிஸ்துமஸ் விழாவின்போது சட்டம், ஒழுங்கை பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேசம் மட்டும்தான் இந்த உலகவே ஒரே குடும்பத்தைச் சார்ந்தது என்ற கொள்கை பிடிப்புடன் இருக்கிற்து.
எனவே, மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் அனைவரது பண்டிகைகளையும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும்" என்றார்.