கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் 1997-ல் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, பிரசாந்த் குமார் மிஸ்ரா அமர்வுநேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். மேலும், "பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கீழமை நீதிமன்றங்கள் தனிக்கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுக்க முடியும். பெண்களுக்கு எதிராக குற்றம் இழைத்தவர்கள் தப்பிக்க கூடாது" என்று அறிவுறுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in