இந்தியா
மும்பை அருகே 40 மாடி கட்டிடத்தில் லிப்ட் அறுந்து 7 பேர் உயிரிழப்பு
தானே: மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகேயுள்ள தானே நகரில் 40 மாடி கட்டிடத்தில் லிப்ட்டை சரி செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
வேலையை முடித்துக் கொண்டு தொழிலாளர்கள் லிப்ட் வழியாக கீழே இறங்கியபோது அவற்றின் கம்பிகள் அறுந்து லிப்ட் கீழே விழுந்து நொறுங்கியது. இதில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்டதே விபத்துக்கு காரணம் என மற்றதொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
