

பாட்னா: பிஹாரின் ராம்பூர் ஷாயாமாக் பகுதியில் நடந்த உள்ளூர் விழாவில் பங்கேற்க வைஷாலி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கங்கை நதியில் படகில் சென்றனர்.
நதியின் மையப் பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் நதியில் விழுந்து தத்தளித்தனர். சிலர் மட்டும் நீந்தி கரையேறினர். உள்ளூர் மக்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். 10-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.