சென்னையில் காமிக் கான் இந்தியா நிகழ்ச்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: காமிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 10 ஆண்டுகளாக காமிக் கான் இந்தியா நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், முதன்முறையாக சென்னையில் காமிக் கான் இந்தியா நிகழ்வு நடக்கிறது.

2024 பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்நிகழ்வு நடக்கிறது. இது குறித்து காமிக் கான் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஜதின் வர்மா கூறுகையில், “வெகுஜன கலாச்சார ரசிகர்கள் அதிகம் உள்ள சென்னையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும்” என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in