

புதுடெல்லி: வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியதோடு, நிலைமையை ஆய்வு செய்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில், “நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்துப் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியதோடு நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகங்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் அணிகள் பணியாற்றுகின்றன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா முதலான வட மாநிலங்களில் கனமழை பெய்துவரும் சூழலில், அங்கே மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். | அதன் விவரம்: யமுனை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அவசர ஆலோசனை
இதனிடையே, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து 14 உயிர்கள் பறிபோன நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு பொதுமக்கள் வீடுகளிலேயே பத்திரமாக இருக்குமாறு முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம்: வட மாநிலங்களில் கனமழை, வெள்ள பாதிப்பு: 22 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்