நாகாலாந்து மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து 10 பேர் உயிரிழப்பு

மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை
நாகாலாந்து மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து 10 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கொகிமா: நா​காலாந்து மாநிலம் டியூன்​சாங் மாவட்​டத்​தில் விஷச் சாரா​யம் குடித்த 10 பேர் உயி​ரிழந்​ததைத் தொடர்ந்​து, மாநிலம் முழு​வதும் காவல் துறைத் தலை​வர் தீவிர எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

கடந்த 1989-ல் கிறிஸ்தவ மற்​றும் சமூக அமைப்​பு​களின் கோரிக்​கை​யால் குடும்ப வன்​முறையைக் குறைக்​க​வும், சமூக மாற்​றத்​தைக் கொண்​டு​வர​வும் ‘நா​காலாந்து முழு மது​விலக்கு சட்​டம்’ உரு​வாக்​கப்​பட்டு 1990-ல் அமலானது. ஆரம்​பத்​தில் கிராமக் குழுக்​கள் மற்​றும் பெண்​கள் அமைப்​பு​களின் ஆதர​வால் இது வெற்றி பெற்​ற​தாகக் கருதப்​பட்​டது.

ஆனால் 35 ஆண்​டு​களுக்​குப் பின் இச்​சட்​டம் தோற்​று​விட்​ட​தாக நாகாலாந்து கலால் துறை ஆலோ​சகர் மொவாதோஷி லோங்​குமர் சட்​டப்​பேர​வை​யில் ஒப்​புக்​கொண்​டார்.

கோஹிமா நகரில் மட்​டும் 500-க்​கும் மேற்​பட்ட சட்​ட​விரோத மதுக்​கடைகள் இயங்​கு​வதும், அசாம் எல்​லை​யி​லிருந்து கடத்​தப்​படும் போலி மது​வால் இளைஞர்​களின் உயி​ரிழப்​பு, போதைப்​பழக்​கம் அதி​கரிப்​பதும் தெரிய​வந்​துள்​ளது.

இந்​நிலை​யில்​தான், டியூன்​சாங் மாவட்டத்தில் விஷச் சாரா​யம் குடித்து 10 பேர் உயி​ரிழந்த அதிர்ச்​சித் தகவல் வெளி​யானது. இதையடுத்​து, நாகாலாந்து டிஜிபி ரூபின் சர்மா கடுமை​யான எச்​சரிக்கை விடுத்​து, நிலைமை சீராகும் வரை டியூன்​சாங் உள்​ளிட்ட 7 மாவட்ட மக்​களும் பிற பகு​தி​யினரும் மது அருந்த வேண்​டாம் எனக் கேட்​டுக்​கொண்​டார்.

இதனிடையே, தனி​நபர் குடிப்​பழக்​கத்தை அரசு தடுக்க முடி​யாது என்​றும் தேவை உள்​ளவரை விநி​யோகம் இருக்​கும் என்​றும் அம்​மாநில முதல்​வர் நெய்​பியு ரியோ கூறி​யுள்​ளார். இதனிடையே, தோல்​வியடைந்த மது​விலக்​குச் சட்​டத்தை ரத்து செய்​து​விட்​டு, வயது வரம்பு உள்​ளிட்ட கடுமை​யான வி​தி​களு​டன் கூடிய புதிய உரிம முறையைக் கொண்​டு​வர வலி​யுறுத்​தப்​பட்​டு வருகிறது.

நாகாலாந்து மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து 10 பேர் உயிரிழப்பு
டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் கட்டணம் பல மடங்கு உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in