ஆடம்பர வாழ்க்கை குறித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு

ஆடம்பர வாழ்க்கை குறித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு
Updated on
1 min read

போபால்: மத்​திய பிரதேசத்​தைச் சேர்ந்​தவர் ரச்​சனா குர்​ஜார். பிரபல யூடியூப​ரான இவர், ஹோம்டூர் என்ற பெயரில் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்து அடிக்​கடி வீடியோக்​களை வெளியிட்டு வந்​தார். வீட்​டின் ஒவ்​வொரு அறை, அலமாரி​களில் என்​னென்ன பொருட்​கள் இருக்​கின்றன என்​பதை தனது வீடியோக்​களில் காண்​பித்​தார்.

இந்த வீடியோக்​களை பார்த்த மர்ம நபர்​கள் கடந்த சனிக்​கிழமை அதி​காலை 2 மணிக்கு அவரின் வீட்​டில் நுழைந்​தனர். ரச்​சனா மற்றும் அவரது குடும்​பத்​தினர் தூங்​கிக் கொண்​டிருந்த அறையை வெளிப்​புற​மாக பூட்​டினர். பின்​னர் ஹோம் டூர் வீடியோக்​களில் பார்த்த காட்​சிகளின் அடிப்​படை​யில் வீட்​டில் இருந்த நகைகள், பணம், விலை உயர்ந்த பொருட்​களை திருடர்​கள் கொள்ளை அடித்​து தப்​பிச் சென்​றனர்.

அதி​காலை 4 மணிக்கு கண் விழித்த ரச்​சனா கதவு வெளிப்புறமாக பூட்​டப்​பட்​டிருந்​ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். செல்போன் வாயி​லாக அரு​கில் உள்ள உறவினர்களுக்கு அவர் தகவல் தெரி​வித்​தார். அவர்​கள் விரைந்து வந்து மீட்​டனர்.

இதுகுறித்து ரச்​சனா கூறும்​போது, “எங்​கள் வீட்​டில் நுழைந்த கொள்​ளை​யர்​கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள், விலை உயர்ந்த பொருட்​களை திருடிச் சென்​றுள்​ளனர். இதுகுறித்து உள்​ளூர் போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளோம்’’ என்றார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்​போது, “ரச்​ச​னா​வின் ஹோம் டூர் வீடியோக்​களை பார்த்த திருடர்​கள் நன்கு திட்​ட​மிட்டு திருட்டை அரங்​கேற்றி உள்​ளனர். இது​போன்ற வீடியோ வெளி​யிடு​வதை தவிர்ப்​பது நல்​லது’’ என்​றனர்​.

ஆடம்பர வாழ்க்கை குறித்து வீடியோ வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு
தவெக வலைவீச்சில் அல்லாடும் அதிமுக - என்ன செய்யப் போகிறார் பழனிசாமி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in