பட்டாம்பூச்சிகளுக்கு முழு பட்டியல்: 13,703 இனங்கள் இருப்பது உறுதி

பட்டாம்பூச்சிகளுக்கு முழு பட்டியல்: 13,703 இனங்கள் இருப்பது உறுதி
Updated on
1 min read

கொல்கத்தா: இந்தியாவில் காணப்படும் பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப் பூச்சிகள் குறித்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விரிவான ஆய்வுகளின் முடிவில், நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ கலைக்களஞ்சியப் பட்டியலை இந்திய விலங்கியல் சர்வே அமைப்பு (இசட்எஸ்ஐ) தயாரித்துள்ளது. சுமார் 13,703 இனங்கள் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விலங்கியல் சர்வே அமைப்பு பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சிகளுக்கான பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பிரம்மாண்டப் பட்டியல், மொத்தம் 22 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

இதில் ‘லெபிடோப்டெரா’ என்ற பூச்சியின வரிசையின் கீழ் வரும் பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகளின் 13,703 சிற்றினங்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட அறிவியல் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தொகுப்பை இசட்எஸ்ஐ வகைப்பாட்டியல் வல்லுநர்களான ராகுல் ஜோஷி மற்றும் நவ்னீத் சிங் ஆகியோர் எழுதியுள்ளனர். இவர்களது இந்த ஆய்வுக்கட்டுரை ‘சூடாக்ஸா’ என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் அறியப்பட்ட பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சி களின் பன்முகத்தன்மையில், இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 8.25 சதவீதம் அளவுக்கு உள்ளது.

பட்டாம்பூச்சிகளுக்கு முழு பட்டியல்: 13,703 இனங்கள் இருப்பது உறுதி
பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in