‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் கொளத்தூரில் சூரியக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் கொளத்தூரில் சூரியக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி
Updated on
1 min read

சென்னை: ​கொளத்​தூர் சோம​நாத சுவாமி கோயில் வளாகத்​தில் உள்ள சூரியக்​குளத்​தைத் தூய்​மைப்​படுத்​தும் பணியை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பினர் மேற்​கொண்​டனர்.

பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் கே.அண்​ணா​மலை​யால் தொடங்​கப்​பட்ட ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பின் முக்​கிய நோக்​கங்​களில் தூய்​மைப் பிரச்​சா​ர​மும் ஒன்​றாகும்.

அதாவது, தமிழகத்​தின் அனைத்து தொகு​தி​களி​லும் உள்ள பொது இடங்​களைத் தூய்​மைப்​படுத்​தி, பிளாஸ்​டிக் பயன்​பாட்​டைக் குறைத்​து, நிலை​யான சுற்​றுச்​சூழல் கொண்ட தமிழகத்தை உரு​வாக்​கு​வது முக்​கிய இலக்​காகும்.

இந்​நிலை​யில், கொளத்​தூர் சோம​நாத சுவாமி கோயில் வளாகத்​தில் உள்ள சூரியக்​குளத்தை தூய்​மைப்​படுத்​தும் பணியை ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பினர் நேற்று முன்​தினம் மேற்​கொண்​டனர். கொளத்​தூர் மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் உள்ள நீர்​நிலைகளைத் தொடர்ந்து தூய்​மைப்​படுத்தி பாது​காக்​கும் பணி​களை மேற்​கொள்ள உள்​ள​தாக அமைப்​பினர் தெரி​வித்​தனர்.

நிகழ்ச்​சி​யில் ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் பொதுச்​செய​லா​ளர் கரு.​நாக​ராஜன் பங்​கேற்று பணி​களை பார்​வை​யிட்​டார். நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​களாக பூபேஷ் பி. மற்​றும் ஹேம​மாலினி செயல்​பட்​டனர்.

இந்​நிகழ்​வில் 20-க்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​கள் மற்​றும் 30-க்​கும் மேற்​பட்ட பொது​மக்​கள் கலந்து கொண்டு தூய்​மைப் பணி​யில் ஈடு​பட்​டனர். தொடர்ந்து நீர்​நிலைகள் பாது​காப்பு தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட துறை​யினரிடம் மனு அளிக்​க​வும் திட்​ட​மிட்​டுள்​ள​தாக அமைப்​பினர் தெரி​வித்​தனர்​.

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் கொளத்தூரில் சூரியக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி
சேவல் சண்டையை முறைப்படுத்தவே சுற்றறிக்கை; தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் அறிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in