டெல்லி காற்று மாசு பிரச்சினை - காஸ் முகக்கவசம் அணிந்தபடி நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்

டெல்லி காற்று மாசு பிரச்சினை - காஸ் முகக்கவசம் அணிந்தபடி நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் காற்று மாசு பிரச்​சினையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் காஸ் முகக்​கவசம் அணிந்தபடி நேற்று நாடாளு​மன்​றத்​துக்கு வந்​தனர்.

தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சினை அதிக அளவில் நிலவி வரு​கிறது. இதனால் பொது​மக்​கள் சுவாசப் பிரச்​சினை உள்​ளிட்ட பல்​வேறு வியா​தி​களுக்கு ஆளாகின்​றனர். இந்​நிலை​யில் நாடாளு​மன்ற குளிர்​காலக் கூட்​டத் தொடர் கடந்த திங்​கள்​கிழமை தொடங்​கியது. இந்​நிலை​யில், டெல்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சினையை கட்​டுப்​படுத்த மத்​திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று நாடாளு​மன்​றத்​துக்கு எதிர்க்​கட்​சித் தலைவர்​கள் காஸ் முகக்​கவசத்​துடன் வந்​தனர்.

முதலா​வ​தாக மூத்த காங்​கிரஸ் தலை​வர் தீபிந்​தர் சிங் ஹூடா, காஸ் முகக்​கவசத்​துடன் வருகை தந்​தார். இதைத் தொடர்ந்து எதிர்க்​கட்​சிகளைச் சேர்ந்த வேறு சில தலை​வர்​களும் காஸ் முகக்கவசத்​துடன் வருகை தந்​தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளன.

காங்​கிரஸ் மூத்த எம்​.பி. தீபிந்​தர் சிங் ஹூடா கூறும்​போது, “காற்று மாசுப் பிரச்​சினைக்கு மற்ற மாநிலங்​கள், எதிர்க்​கட்​சிகளை குறை கூறு​வதை விட்​டு​விட்​டு, உடனடி​யாக மத்​திய அரசு நடவடிக்கை எடுக்​க வேண்​டும். இந்​தப் பிரச்​சினை​யில் பிரதமர் மோடி நேரடி​யாக தலை​யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஹரி​யா​னா, பஞ்​சாப், உத்​தரபிரதேசம், டெல்​லி, ராஜஸ்​தான் மாநில முதல்​வர்​களைக் கொண்டு குழு அமைத்து இந்​தப் பிரச்​சினைக்​குத் தீர்வு காண வேண்​டும். இதற்​காக பட்​ஜெட்​டில் நிதி ஒதுக்கி விரி​வான திட்​டத்​தைத் தயாரிக்​கலாம். இதன்​மூலம் லட்சக்​கணக்​கான மக்​கள் அவதிப்​படு​வதைத் தடுக்க முடி​யும்” என்​றார். டெல்​லி​யில் நேற்று காற்று தரக்​குறி​யீடு 356-ஆக (மிக மோசம்) இருந்​தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி காற்று மாசு பிரச்சினை - காஸ் முகக்கவசம் அணிந்தபடி நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்
கோயில் நிர்வாகி கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள்: தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in