யானைகளின் வழித்தடங்களை மீட்க இடுக்கி ஆட்சியர் உத்தரவு

யானைகளின் வழித்தடங்களை மீட்க இடுக்கி ஆட்சியர் உத்தரவு

படங்கள்: என்.கணேஷ்ராஜ்

Updated on: 
1 min read

மூணாறு: யானைகளின் வழித்தடங்களில் அமைக்கப்பட்ட மின் மற்றும் சோலார் வேலிகளால் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வரும் நிலை உள்ளது. ஆகவே, இவற்றை அகற்ற இடுக்கி ஆட்சியர் தினேசன் உத்தரவிட்டுள்ளார்.

இடுக்கி மாவட்டம் மூணாறில் வனப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. சுற்றுலாத் தலம் மற்றும் ரிசார்ட்ஸ் போன்றவற்றுக்காக வனப் பகுதிகள் அழிப்பு மற்றும் யானைகளின் வழித்தடம் மறிக்கப்படுவதால் தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. தடம் மாறி வரும் யானைகளால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதுபோன்ற நிலையைத் தடுக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேசன், யானைகளின் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர்கள் மற்றும் வேலிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதற்கான முதற்கட்டப் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஆட்சியரின் உத்தரவுக்கு விவசாயிகள் மற்றும் ஏலக்காய் உற்பத்தியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில்,  “சாகச சுற்றுலா என்ற பெயரில் தனியாருக்கு அனுமதி அளித்ததாலே விலங்குகள் வழித்தடம் மாறி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் வந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே, முதலில் அதுபோனற நிலையை மாற்ற வேண்டும்” என்றனர்.

யானைகளின் வழித்தடங்களை மீட்க இடுக்கி ஆட்சியர் உத்தரவு
மேட்டூர் அருகே பண்ணவாடியில் அரிய வகை ‘செங்கழுத்து பாலரோப்’ பறவை முதல் முறையாக பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in