மேட்டூர் அருகே பண்ணவாடியில் அரிய வகை ‘செங்கழுத்து பாலரோப்’ பறவை முதல் முறையாக பதிவு

அறிய வகை செங்கழுத்து பாலரோப் பறவை

அறிய வகை செங்கழுத்து பாலரோப் பறவை

Updated on
2 min read

மேட்டூர்: மேட்டூர் அருகே பண்ணவாடியில் செங்கழுத்து பாலரோப் பறவை, மாவட்டத்தில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என சிறகுகள் மற்றும் இயற்கை ஆராய்ச்சி கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பண்ணவாடி பரிசல் துறைக்கு அரிய வலசைப் பறவையான செங்கழுத்து பாலரோப் வருகை தந்துள்ளதை பறவை ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவே சேலம் மாவட்டத்தில் இப்பறவையினத்தின் முதல் பதிவாகக் உள்ளது.

பண்ணவாடியில் தெரக்கு உள்ளான் பறவை 2-வது முறையாகப் பதிவாகியுள்ளது. இதனை சிறகுகள் மற்றும் இயற்கை ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ஷாஜான் கோபி விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஐய்யப்பன் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “பண்ணவாடி பரிசல் துறை தொடர்ந்து பல்வேறு வலசைப் பறவைகளையும், அரிதாகக் காணப்படும் நீர்வாழ் பறவைகளையும் ஈர்த்து வருகிறது. சேலம் போன்ற உள்மாவட்டப் பகுதியில் கடற்கரை மற்றும் கடலோர ஈரநிலங்களுடன் தொடர்புடைய பறவைகள் பதிவாவது, இப்பகுதியின் சூழலியல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

<div class="paragraphs"><p>தெரக்கு உள்ளான் பறவை</p></div>

தெரக்கு உள்ளான் பறவை

செங்கழுத்து பாலரோப் என்பது வடக்கு அரைக்கோளத்தின் ஆர்க்டிக் மற்றும் சப்ஆர்க்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு வலசை செல்லும் சிறிய நீர்ப்பறவையாகும். கடல் பரப்பிலும், உவர்நீர் ஏரிகள் மற்றும் ஈரநிலங்களிலும் உணவு தேடும் தன்மை கொண்டது. சிறிய நீர்வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் நீரில் காணப்படும் பிற நுண்ணுயிரினங்களை உணவாகக் கொள்கிறது.

மற்ற நீர்ப்பறவைகளிலிருந்து வேறுபட்டு, பாலரோப் இனப் பறவைகள் நீரின் மேற்பரப்பில் சுழன்று உணவு தேடும் தனித்துவமான நடத்தை கொண்டுள்ளது. நீரில் சுழற்சி ஏற்படுத்துவதன் மூலம் சிறிய உயிரினங்கள் மேலே வரச் செய்து அவற்றைப் பிடித்து உணவாக உட்கொள்கின்றன.

பண்ணவாடி பரிசல் துறையில் ஏற்கெனவே பல்வேறு வலசைப் பறவைகள், நீர்ப்பறவைகள் மற்றும் கடலோர வாழ்விடங்களுடன் தொடர்புடைய பறவைகள் பதிவாகியுள்ளன.

தற்போது செங்கழுத்து பாலரோப் சேலம் மாவட்டத்தில் முதல் முறையாகப் பதிவாகியுள்ளது. தெரக்கு உள்ளான் பறவை 2-வது முறையாகப் பதிவாகியுள்ளது. பண்ணவாடியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பறவை கண்காணிப்பு, வலசைப் பறவைகளின் வருகை, வாழ்விடப் பயன்பாடு மற்றும் பருவகால மாற்றங்கள் குறித்த புரிதலை மேம்படுத்துவதுடன், இப்பகுதியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக அமையும்” என்றனர்.

<div class="paragraphs"><p>அறிய வகை செங்கழுத்து பாலரோப் பறவை</p></div>
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in