கொடைக்கானல் சரணாலய பகுதிகளில் ‘கேம்ப் பயர்’ இசை நிகழ்ச்சிக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

கொடைக்கானல் சரணாலய பகுதிகளில் ‘கேம்ப் பயர்’ இசை நிகழ்ச்சிக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: கொடைக்​கானல் சரணாலயப் பகு​தி​களில் உள்ள கட்டிடங்​களில் ‘கேம்ப் பயர்’, இசை நிகழ்ச்சி நடத்​தக் கூடாது என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கொடைக்​கானலைச் சேர்ந்த பால​கிருஷ்ணன், செல்​வகணபதி உள்​ளிட்ட 5 பேர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: ஆனைமலை புலிகள் காப்​பகம் விரிவுபடுத்​தப்​பட்டு கொடைக்​கானல் மற்​றும் திண்​டுக்​கல் வனப்​பிரி​வில் சில பகு​தி​கள் இணைக்​கப்​பட்​டன. இப்​பகு​தி​யில் தேசிய வனவிலங்கு வாரி​யத்​திடம் அனு​மதி பெறாமல் விடு​தி​கள், ஹோட்​டல்​கள், பூங்​காக்​கள் அமைக்​கக் கூடாது. ஆனால், கொடைக்​கானலில் முறை​யான அனு​மதி இல்​லாமல் வணி​கக் கட்​டிடங்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

எனவே, மன்​னவனூர் கிராமத்​தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகு​தி​யில் வணிக கட்​டிடங்​களுக்கு அனுமதி வழங்க தடை விதித்​தும், மன்​னவனூர் கிராமத்​தில் சட்​ட விரோத​மாக கட்​டப்​பட்ட வணிக கட்​டிடங்​களை அகற்​ற​வும் உத்தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர் தரப்​பில், இங்​குள்ள வணி​க ரீ​தி​யான கட்டிடங்​களில் ஒவ்​வொரு நாளும் ‘கேம்ப் பயர்’ அமைக்​கப்​பட்டு இசை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​படு​கின்றன என கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், மனு தொடர்​பாக தமிழக வனத்​துறை முதன்​மைச் செயலர், ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வன பாது​காவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்​டும். இங்​குள்ள தனி​யார் விடு​தி​களில் ‘கேம்ப் பயர்’ மற்​றும் இசை நிகழ்ச்​சிகள் நடத்​தக் கூடாது. இந்த மனு, வனம் தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்​கும் அமர்​வுக்கு மாற்​றப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்.

கொடைக்கானல் சரணாலய பகுதிகளில் ‘கேம்ப் பயர்’ இசை நிகழ்ச்சிக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
போர்ச்சுகலுக்கு ஷாக் கொடுத்த காங்கோ: ரொனால்டோ ஏமாற்றம் | FIFA WC - Match Momentum

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in