

கோப்புப்படம்
புதுடெல்லி: இங்கிலாந்தைச் சேர்ந்த ‘கிறிஸ்டியன் எய்டு’ என்ற தன்னார்வ அமைப்பு, பருவ நிலை மாற்றத்தால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஆய்வு செய்துள்ளது.
இதன்படி 2025-ல் அனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி மற்றும் புயல்களால் உலக நாடுகளுக்கு 122 பில்லியன் டாலருக்கு மேல் (சுமார் ரூ.11 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க அவசர நடவடிக்கை எடுக்கப்படாததால் ஒரு நெருக்கடியின் பாதிப்பை சமூகங்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2025-ல் மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்திய பேரிடர்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ, 60 பில்லியன் டாலர் சேதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 400-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கும் இது வழிவகுத்தது.
மிக அதிக இழப்பு ஏற்படுத்திய முதல் 4 பேரழிவுகளில் 4 ஆசியாவில் நிகழ்ந்தன. இந்தியா, பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சுமார் ரூ.54,000 கோடி வரை இழப்பை ஏற்படுத்தியது.