சென்னை துறைமுகத்தில் வெண்புகை வெளியேற என்ன காரணம்? - மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை துறைமுகத்தில் வெண்புகை வெளியேற என்ன காரணம்? - மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: துறை​முகத்​தில் வெண்புகை வெளி​யேற காரணம் என்ன என்​பது குறித்து மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யம் அறிக்கை அளிக்க வேண்​டும் என தேசிய பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை துறை​முக வளாகத்​தில், கப்​பலில் கொண்​டு​வரப்​பட்ட கந்​தகம் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்​தது. கடந்த 2 வாரங்​களாக சென்​னை​யில் 104 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதி​வாகி வரு​கிறது.

இந்​நிலை​யில், கடந்த ஜூன் 2-ம் தேதி துறை​முகத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த கந்​தகம், கடும் வெப்​பம் காரண​மாக வேதி​யியல் மாற்​றத்​துக்கு உள்​ளாகி காற்​றில் வெண்​பு​கை​யாக பறந்​தது.

இதனால், துறை​முக வளாகத்தை ஒட்​டி​யுள்ள பகு​தி​களில் புகை மூட்​ட​மாக காணப்​பட்​டது. தலை​மைச் செயல​கத்​துக்கு எதிரே வாகன நிறுத்​து​மிடம், காம​ராஜர் சாலை மற்​றும் அதை ஒட்​டி​யுள்ள ஆர்​பிஐ அலு​வல​கம் அரு​கில் புகை பரவியது.

காற்​றில் பரவிய இந்த புகை​யால் அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸார், முதல்​வர் தனிப்​பிரி​வில் புகார் மனு அளிக்க வந்த பொது​மக்​கள், சாலை​யோர வியா​பாரி​கள், அரசு ஊழியர்​கள் உள்​ளிட்​டோர் மூச்​சுத் திணறல், இரு​மல், மற்​றும் கண் எரிச்​சலால் அவதிப்​பட்​டனர்.

அதைத் தொடர்ந்து துறை​முக அதி​காரி​கள் உடனடி​யாக ரசாயன பொடிகளைத் தூவி, புகை வெளி​யேற்​றத்தை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர். புகை வெளி​யேறிய பகு​தி​யில் தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாடு வாரிய அதி​காரி​கள் ஆய்வு செய்​து, புகை வெளி​யேறியதற்​கான காரணம் குறித்து அரசுக்கு அறிக்கை அளித்​தனர்.

துறை​முக நிர்​வாகத்​துக்​கும் உரிய அறி​வுறுத்​தல்​களை வழங்​கினர். இதுகுறித்த செய்தி நாளிதழ்​களில் வெளி​யானது. அதனடிப்​படை​யில் தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்​வந்து வழக்​காக பதிவு செய்​தது.

இந்த வழக்கு அமர்​வின் நீதித்​துறை உறுப்​பினர் நீதிபதி புஷ்பா சத்​ய​நா​ராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் பிர​சாந்த் கார்​கவா ஆகியோர் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, “வா​யுக்​கசிவு தொடர்​பாக மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யம் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். எதனால் வாயுக்​கசிவு ஏற்​பட்​டது, கந்​தகத்தை பாது​காப்​பாக சேமிப்​ப​தற்​கான வழி​முறை​கள், இனி இது​போன்ற நிகழ்​வு​கள் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்​டும், கந்​தகத்தை கையாளும் பணி​யாளர்​களின் பாது​காப்​புக்கு என்ன செய்ய வேண்​டும் என்பன உள்​ளிட்​டவை குறித்து அறிக்​கை​யில் இடம்​பெற வேண்​டும்” என்று உத்​தர​விட்ட அமர்​வின்​ உறுப்​பினர்​கள்​, வழக்​கின்​ வி​சாரணையை தள்ளி வைத்தனர்.

சென்னை துறைமுகத்தில் வெண்புகை வெளியேற என்ன காரணம்? - மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு: எல்.முருகன் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in