உரிய நிதி ஒதுக்காமல் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது எப்படி? - கண்காணிப்பு குழு தலைவர் செல்வம் கேள்வி

உரிய நிதி ஒதுக்காமல் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது எப்படி? - கண்காணிப்பு குழு தலைவர் செல்வம் கேள்வி
Updated on
1 min read

சிவகங்கை: நிதி ஒதுக்​காமல் சீமைக் கரு​வேல மரங்​களை எப்​படி அகற்ற முடி​யும் என சிவகங்கை மாவட்​டத்​தில் கண்​மாய்​களை ஆய்வு செய்த பின்​னர் உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தி​யும் கண்​காணிப்புக் குழு தலை​வரு​மான செல்​வம் கேள்வி எழுப்​பி​னார்.

பரு​வ​மழை தொடங்​கு வதற்கு முன்பு சீமைக் கரு​வேல மரங்​களை அகற்ற வேண்​டும். அந்த இடங்​களில் உள்​ளூர் மரங்​களை வளர்க்க வேண்​டும். தனி​யார் இடங்​களில் அதன் உரிமை​யாளர்​களே மரங்​களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டது.

இப்பணியை தென் மாவட்டங்​களில் விரைவுபடுத்தி கண்காணிக்​கும் அமைப்பின் தலை​வ​ராக உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி செல்​வம் நியமிக்​கப்​பட்​டார்.

இதையடுத்​து, நேற்று சிவகங்கை அருகே இலந்​தங்​குடிபட்டி கண்​மாய், கண்​டாங்​கிபட்டி சில்​லாரிக் கருப்​பன் கண்​மாய் ஆகிய இடங்​களில் சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​றியது தொடர்​பாக அவர் ஆய்வு செய்​தார்.

அப்​போது, மாவட்ட ஆட்​சி​யர் ப.ஆ​காஷ், கோட்​டாட்​சி​யர் ஜெபிகிரேசியா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். பின்​னர், முன்​னாள் நீதிபதி செல்​வம் செய்​தி​யாளர்​களிடம் கூறியது:

சிவகங்​கை, புதுக்​கோட்​டை, மதுரை ஆகிய 3 மாவட்டங்​களில் ஆய்வு செய்​துள்​ளேன். சீமைக் கரு​வேல மரங்​களை குறைந்​தது 3 ஆண்​டு​கள் தொடர்ந்து திட்​ட​மிட்டு செயல்​பட்​டால் தான் அகற்ற முடி​யும். போதிய நிதி ஒதுக்​காமல் சீமைக் கரு​வேல மரங்​களை எப்​படி அகற்ற முடி​யும்?

ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் குறைந்​தது ரூ.5 கோடி​யை முதல்​வர் ஒதுக்கி சீமைக் கரு​வேல மரங்​களை அகற்​றும் நடவடிக்​கையை துரிதப்​படுத்த வேண்​டும்.மனிதனுக்கு புற்​று​நோய் போல், மண்​ணுக்கு சீமைக் கருவேல மரங்​கள் ஆபத்​தானது. இதனால் அவற்றை அகற்ற அரசு மட்​டுமின்றி பொது​மக்​களும் தனி கவனம் செலுத்த வேண்​டும்.

உரிய நிதி ஒதுக்காமல் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது எப்படி? - கண்காணிப்பு குழு தலைவர் செல்வம் கேள்வி
மின்வாரிய ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in