குப்பையில் இருந்து மிதியடி, பிளாஸ்டிக் கூடை: கும்பகோணத்தில் அசத்தும் தூய்மைப் பணியாளர்கள்

குப்பையில் இருந்து மிதியடி, பிளாஸ்டிக் கூடை: கும்பகோணத்தில் அசத்தும் தூய்மைப் பணியாளர்கள்
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் மாநகரில் குப்பையில் வீசப்பட்ட பழைய துணிகளில் இருந்து மிதியடிகளையும், பெரிய பொருட்களை பெட்டியில் வைத்து கட்டு கட்ட பயன்படுத்தும் தடிமனான பிளாஸ்டிக் வயர்களில் இருந்து கூடைகளையும் தூய்மைப் பணியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.

கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 15 டன் குப்பை, கரிக்குளத்தில் உள்ள உரக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு தூய்மைப் பணியாளர்களால் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படும் நிலையில், மக்காத குப்பை சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள், பழைய துணிகளில் இருந்து மிதியடிகளையும், பெரிய பொருட்களை கட்டு கட்ட பயன்படுத்தும் தடிமனான பிளாஸ்டிக் வயர்களில் இருந்து கூடைகளையும் தயாரித்து வருகின்றனர். இவை விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: கும்பகோணத்தை குப்பை யில்லா மாநகரம் ஆக உருவாக் கும் நோக்கிலும், தூய்மைப் பணியாளர்களின் வருமா னத்தைப் பெருக்கவும் மாநக ராட்சி ஆணையரின் அறிவுறுத் தலின்படி. கரிக்குளம் உரக் கிடங்கில் குப்பையை தரம் பிரிக் கும்போது. பழைய துணிகள் மற்றும் கட்டு கட்ட பயன்படுத்தும் தடிமனான பிளாஸ்டிக் வயர்கள் தனியாக சேகரிக்கப்படுகின்றன. பின்னர். அவை நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்டு.

உலர்ந்த பிறகு பழைய துணிகளில் இருந்து மிதியடிகளும், பிளாஸ்டிக் வயர்களில் இருந்து கூடையும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் 18 பேர் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான உரக் கிடங்கு பணி முடிந்த பிறகு. இந்தப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு கூடுதல்வரு மானம் ஈட்ட வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. இதன்படி, தற்போது வரை 300 கூடைகள், 200 மிதியடிகள் ஆகியவை தயாரிக் கப்பட்டுள்ளன.

மாநகராட்சி சார்பில் விற் பனைநிலையம் விரைவில் திறக் கப்பட்டு அங்கும் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் மக்கள் கூடும் இடங்களிலும் இவை விற் பனை செய்யப்பட உள்ளன. உற் பத்தி மற்றும் விற்பனை மதிப் புக்கு ஏற்ப தூய்மைப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது என்றனர்.

குப்பையில் இருந்து மிதியடி, பிளாஸ்டிக் கூடை: கும்பகோணத்தில் அசத்தும் தூய்மைப் பணியாளர்கள்
“கோவை கல்லூரி மாணவர் கொலையை அமைச்சர் ராஜ்மோகன் திசை திருப்புகிறார்” - மாணவரின் பெற்றோர் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in