முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை உயிரிழப்பு
Updated on
1 min read

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட குதிரைப் பாறை பகுதியில் சுமார் 50 வயதுடைய பெண் யானை ஒன்று இன்று உயிரிழந்து கிடந்தது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனப் பணியாளர்கள் யானையின் உடலை கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் தெப்பக்காடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில், வயது முதிர்வு காரணமாக யானை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. யானையின் இறப்புக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய, நாளை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் யானையின் இறப்பு தொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்படும் என மசினகுடி வனச்சரக அலுவலர் வி.ராஜன் தெரிவித்துள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை உயிரிழப்பு
பழைய ரயில் பெட்டியில் உணவகம் - சேலத்தில் கவனம் ஈர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in