

புதுடெல்லி: எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (CREA), ஜனவரிக்கான தனது பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜனவரியில் நாட்டில் காஜியாபாத்துக்கு பிறகு மிகவும் மாசுபட்ட 2-வது நகரமாக டெல்லி இருந்துள்ளது.
டெல்லியில் ஒரு கன மீட்டருக்கு 169 மைக்ரோ கிராம் அளவுக்கு பிஎம் 2.5 துகள்கள் பரவியிருந்தன. இது இந்தியாவின் தேசிய காற்றுத் தரநிலை வரம்பைவிட இது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம். ஜனவரியில் காஜியாபாத் மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்தது. அங்கு ஒரு கன மீட்டருக்கு 184 மைக்ரோ கிராம் பிஎம் 2.5 துகள்கள் காணப்பட்டன.