T20 WC 2026: சூர்​யகு​மார் யாதவ் அபார ஆட்​டம் - அமெரிக்காவை வீழ்த்​தி​ இந்தியா வெற்றிகரமான தொடக்​கம்

சூர்​யகு​மார் யாதவ்

சூர்​யகு​மார் யாதவ்

Updated on
2 min read

மும்பை: ஆடவருக்​கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் நேற்று கோலாகல​மாக இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கியது.

மும்பை வான்​கடே மைதானத்​தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி அமெரிக்கா​வுடன் மோதி​யது. முதலில் பேட் செய்த இந்​திய அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. பனிப்​பொழிவு இல்​லாத​தால் அமெரிக்க பந்​து​வீச்​சாளர்​கள் துல்​லிய​மாக பந்​து​வீசி நெருக்​கடி கொடுத்​தனர். அதிரடி வீர​ரான அபிஷேக் சர்மா சந்​தித்த முதல் பந்​திலேயே ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய திலக் வர்மா மட்​டையை சுழற்​றி​னார்.

6-வது ஓவரை வீசிய ஷாட்லி வான் ஷால்க்விக் 3 விக்​கெட்​களை வீழ்த்தி இந்​திய அணிக்கு நெருக்​கடி கொடுத்​தார். அவரது பந்து வீச்​சில் இஷான் கிஷன் 20 (பந்​துகள் 16, சிக்​ஸர்​கள் 2, பவுண்​டரி 1), திலக் வர்மா 25 (பந்​துகள் 16, சிக்​ஸர் 1, பவுண்​டரி 3), ஷிவம் துபே 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

இதையடுத்து களமிறங்​கிய ரிங்கு சிங் 6, ஹர்​திக் பாண்​டியா 5 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தனர். 12.4 ஓவர்​களில் 77 ரன்​களுக்கு 6 விக்​கெட்​களை இழந்து இந்​திய அணி தடு​மாறியது. அப்​போது களமிறங்​கிய அக்​சர் படேல் நிதான​மாக விளை​யாட மறு​முனை​யில் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் அதிரடி​யில் வெளுத்து வாங்​கி​னார்.

மட்​டையை சுழற்​றிய சூர்​யகு​மார் யாதவ் 49 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசி அசத்​தி​னார். இதன் காரண​மாக இந்​திய அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 161ரன்​கள் குவித்​தது. சூர்​யகு​மார் யாதவுக்கு உறு​துணை​யாக விளை​யாடிய அக்​சர் படேல் 11 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 14 ரன்​களும், அர்​ஷ்தீப் சிங் 6 பந்​துகளில், 4 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர்.

அமெரிக்க அணி சார்​பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 ஓவர்​களை வீசி 25 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஹர்​மீத் சிங் 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார்.

162 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த அமெரிக்க அணி 15 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 98 ரன்​கள் எடுத்​தது. ஆண்ட்​ரைஸ் கவுஸ் 0, சைதேஜா முக்​கமல்லா 2 ஆகியோர் முகமது சிராஜ் பந்​தி​லும், மோனங்க் படேல் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் அர்ஷ் தீப் பந்​தி​லும் ஆட்​ட​மிழந்​தனர். சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடிய மிலிந்த் குமார் 34 பந்​துகளில் 34 ரன்​கள் எடுத்த நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் ஸ்டெம்​பிங்க் ஆனார்.

அமெரிக்க அணி​யின் வெற்​றிக்கு கடைசி 5 ஓவர்​களில் 64 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. 16-வது ஓவரை வீசிய அக்​சர் படேல் முதல் இரு பந்​துகளில் சஞ்​சய் கிருஷ்ண மூர்த்தி 37 ரன்​கள் (பந்​துகள் 31, சிக்​ஸர்​கள் 2, பவுண்​டரி 1), ஹர்​மீத் சிங் (0) ஆகியோரை ஆட்​ட​மிழக்​கச் செய்​தார். இதனால் அமெரிக்க அணிக்கு நெருக்​கடி அதி​க​மானது.

அர்​ஷ்தீப் சிங்​கின் அடுத்த ஓவரில் முகமது மோஷின் (8) அவுட் ஆனார். கடைசி 2 ஓவர்​களில் அமெரிக்க அணி​யின் வெற்​றிக்கு 51 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. ஹர்​திக் பாண்​டியா வீசிய 19-வது ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. கடைசி ஓவரில் முகமது சிராஜ் 11 ரன்​களை வழங்கி கடை பந்​தில் ஷுபம் ரஞ்​ஜனேவை 37 ரன்​களில் எல்​பிடபிள்யூ முறை​யில் அவுட்​டாக்​கி​னார்.

20 ஓவர்​கள் முடி​வில் அமெரிக்க அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 132 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. 29 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி 2 புள்​ளி​களை பெற்​றது. இந்​திய அணி தரப்​பில் முகமது சிராஜ் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். அர்​ஷ்தீப் சிங்​, அக்​சர்​ படேல்​ ஆகியோர்​ தலா 2 ​விக்​கெட்​களை கைப்பற்றினர்.

<div class="paragraphs"><p>சூர்​யகு​மார் யாதவ்</p></div>
T20 WC 2026: கடைசி ஓவர் வரை அச்சுறுத்திய நெதர்லாந்து - தடுமாறி வென்றது பாகிஸ்தான்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in